சண்டை காட்சியும் ...அடியாளும்







கோழியும் .முட்டைகறியும் சமைத்தாள்
பிள்ளைகளுக்கோ தரவில்லை
ஏனோ தானோ வென உணவு  தந்து
பிஞ்சுகளின் பசியாற்றி தானும உண்டாள்
கணவன் வருகை காத்திருந்து
ஒளித்து வைத்த உணவை தந்தாள்
மனதிலோ மருகி உருகி
இறைவா இவருக்கு சக்தி கொடு என
வேண்டினாள்
திரைப்படங்களில் அடியாள் வேடம்செய்யும் கணவனுக்காய்
~அன்புடன் யசோதா காந்த் ~

10 Responses
  1. மனதை நெருடும் வரிகள்....
    வாழ்த்துக்கள்


  2. கொண்டவன் கடமையைச் செய்து வருகையில்
    உடல்வலி என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்...
    ஆனால்....
    உடலெல்லாம் அடிபட்டு வந்தால்
    எந்த மனைவியால் தான் நிம்மதியாக இருக்க முடியும்...
    அடிபட்டு உதைபட்டு மிதிபட்டு பணம் தேடி
    தன் குடும்பம் காத்திட துடிக்கும் தலைவனின் தலைவி
    செய்யும் செய்கையை அழகாய்
    சுருங்கச் சொன்னாலும் நறுக்குன்னு சொல்லியிருகீங்க சகோதரி...
    தொடரட்டும் தங்களின் கவிப் பணி....


  3. நல்ல சிந்தனை!!த.ம 3


  4. குழந்தைகளைக் காக்க வேண்டுமானால் கணவனைக் காக்க வேண்டுமே..?!! அதனால் இவள் இப்படி செய்திருக்கிறாள்..! ஒரு விருட்சத்தில் ஆணிவேர் முக்கியமல்லவா? பகிர்வுக்கு நன்றி..!!



  5. நன்றி சகோ மகேந்திரன் அவர்களே


  6. நன்றி விச்சு அவர்களே


  7. நன்றி சுப்புடு அவர்களே


  8. Anonymous Says:

    நெஞ்சை தொடும் அழகான கவிதை.நந்தா


  9. நன்றி நந்தா அவர்களே ..


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..